ரீல்ஸை தள்ளிவைத்துவிட்டு ரியலாக களத்தில் இறங்குங்கள்! தவெக அரசுக்கு அறிவுறுத்தியிருப்பது யார்?
ரீல்ஸை தள்ளிவைத்துவிட்டு ரியலாக களத்தில் இறங்குங்கள் என்று தவெக அரசுக்கு அறிவுறுத்தியிருப்பது ....
ரீல்ஸால் ஆட்சிக்கு வந்தோம், இந்த பேரிடரிலும் ரீல்ஸை முன்னிறுத்துவோம் என்று இல்லாமல், ரீல்ஸை தள்ளி வைத்துவிட்டு, ரியலாக களத்திலே இறங்கி தவெக அரசு மக்களை பாதுகாக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியிருக்கிறார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றெழுத்து தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், அதன் விளைவாக தமிழகத்தின் 21 மாவட்டங்களிலே கனமழை வெளுத்து வாங்கப் போவதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. உடனடியாக முதல்வர் ஆய்வு செய்கின்ற ரீல்ஸ்கள் எல்லாம் வெளியே வந்திருக்கிறது.
மின்னல் வேகத்திலே மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெறுவதாக அரசின் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்படுகிறது. தமிழகத்திலே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மழையால் சாலைகளின் நீர் தேங்குதல், போக்குவரத்து பாதிப்பு, தாழ்வான பகுதிகளிலே வெள்ள அபாயம் போன்ற பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
Advertisement
Advertisement
ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன் கால்வாய்களை தூறுவார்த்தல், நீர் நிலைகளை பராமரித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தாழ்வான பகுதிகளை கண்டறிதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தற்போது புதிய தவெக அரசு, மழை துவங்கிய பின்தான் இந்த அவசரகால பணிகளை அவசரமாக தொடங்கி இருப்பது இந்த ரீல்ஸ் அரசு இன்னும் ரியலை புரிந்து கொள்ளவில்லையா என்ற கவலை ஏற்படுகிறது.
வெறும் பருவமழைகான எச்சரிக்கை அறிவிப்பதுடன், அரசின் கடமை முடிந்தது என இருந்து விடாமல், தவெக அரசு, மழைநீர் வடிகால் மற்றும் வாய்க்கால்கள் முறையாக செயல்படுகின்றனவா, அவசர மீட்பு மற்றும் நிவாரண உதவி குழுக்கள் தயார் நிலையிலே இருக்கின்றனவா, மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா, அதற்கு செல்லுகின்ற வழிகளும் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதை எல்லாம் தொடர் கண்காணிப்பிலே வைத்துக்கொள்ள வேண்டும்.
மரக்கிளைகள் முறிந்து விழும் அபாயம் உள்ள இடங்கள், வெள்ளம் சூழக்கூடிய சாலைகள், நீர் நிலைகளின் அருகே உள்ள ஆபத்தான பகுதிகள் ஆகியவற்றின் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்ய வேண்டும். நிவாரண முகாம்களிலும், உணவு வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி, சுகாதாரமான கழிப்பறைகள் உள்ளிட்ட வெள்ளக்கால நிவாரண முகாம்கள் அரசு தயார் நிலையிலே வைத்திருக்க வேண்டும்.
இயற்கை பேரிடரை தடுக்க முடியாது. ஆனால் இயற்கை பேரிடரால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும். மழை வந்த பின்பு மழை நின்ற பின்பு ஆய்வு நடத்துவதை விட, மழை தொடங்குவதற்கு முன்பு மக்களை காக்கும் நிர்வாகமே மக்களின் நம்பிக்கையை பெறும் நிர்வாகமும்.
இதையெல்லாம் அரசுக்கு அறிவுரையாக சொல்லவில்லை. கடந்த காலங்களிலே அம்மாவின் அரசு ,எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு, பெற்ற அனுபவங்களை களத்திலே பெற்ற அனுபவங்களை கஜா புயலின் போது உயிர் ஒரு உயிரிழப்பு இல்லாமல் மேற்கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது , இது சொந்த புராணம் பாடுவதாக அரசு இந்த கருத்தை தள்ளி வைத்து விடக்கூடாது.
இது சொந்த புராணமோ, சுயபுராணமோ, நிச்சயமாக இல்லை. மக்களின் மீது அக்கறையோடு தான் கடந்த கால அனுபவங்களை புதிதாக பொறுப்பேற்றிருக்கிற அரசு, மக்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்க வேண்டும் என்கிற அக்கறையோடு தான் இந்த தகவலை சொல்லுகிறோம்.
தவெக அரசு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி கருத்தையே திரித்து, அதற்கு தலை வைத்து, கால் வைத்து, வால் வைத்து, கை வைத்து, நீங்கள் அந்த சமூக வலைதள பதிவுகளை வெளியிட்டு அந்த குட்டு இப்போது உடைந்திருக்கிறது.
ஆகவே, அதுபோன்ற ஒரு செயற்கையான போலியான இல்லாத விளம்பரங்களை தேடுவதை தள்ளி வைத்துவிட்டு, இதுபோன்ற பேரிடர் காலங்களிலே ரீல்ஸை ஒத்தி வைத்துவிட்டு, ரியலிலே களம் இறங்க முன்வரவேண்டும், இந்த தவெக அரசு என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
ரீல்ஸ் போடுங்கள், இன்ஸ்டாவிலே போடுங்கள், புகழை தேடுங்கள், யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் இதுபோன்ற பேரிடர் காலங்களிலே ரீல்ஸை முதலீடாக வைத்து, நீங்கள் ரியலை பின்னுக்கு தள்ளிவிட்டால், மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
மிகப்பெரிய பேரிடராக வருகிறபோது, அதிலே நாம் களத்திலே நின்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய முதன்மையான கடமை அரசுக்கு இருக்கிறது. ஆகவே, ரீல்ஸால் ஆட்சிக்கு வந்தோம், ஆகவே இந்த பேரிடரை ரீல்ஸை முன்னிறுத்துவோம் என்று இல்லாமல், ரீல்ஸை தள்ளி வைத்துவிட்டு, ரியலாக களத்திலே தவெக அரசு மக்களை பாதுகாக்க வேண்டும் என்கிற மக்கள் மீது இருக்கிற அக்கறையோடு சொல்லுகிறோம். நடவடிக்கை எடுக்குமா தவேக அரசு பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.