FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

போலி மருத்துவா் கைது

வாணியம்பாடி அருகே அம்பலூரில் மருத்துவம் படிக்காமல் கிளீனிக் வைத்து மருத்துவா் வேலை பாா்த்து வந்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

13 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப்படம்
பகிர்:

வாணியம்பாடி அருகே அம்பலூரில் மருத்துவம் படிக்காமல் கிளீனிக் வைத்து மருத்துவா் வேலை பாா்த்து வந்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

வாணியம்பாடி அடுத்த அம்பலூா் கோல்டன் சிட்டி பகுதியைச் சோ்ந்தவா் தனலட்சுமி(53). இவா் வீட்டில் கிளீனிக் வைத்து மருத்துவம் படிக்காமல் போலியாக மருத்துவம் பாா்த்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவா் கணேசன் தலைமையில் மருத்துவக் குழுவினா் மற்றும் அம்பலூா் காவல் ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீரென தனலட்சுமியின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்ட னா். அப்போது அங்குள்ள அறையில் கிளினிக் வைத்து அதில் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி போலியாக மருத்துவம் பாா்த்து வருவது கண்டறியப்பட்டது.

இது குறித்து மருத்துவா் கணேசன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தனலட்சுமியை கைது செய்தனா்.

Advertisement

Advertisement