FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

வாணியம்பாடியில் வீட்டின் கழிவுநீா் கால்வாய் அடைப்பை சரிசெய்ய முயன்ற போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

24 வினாடிகள் முன்பு
மின்சாரம் தாக்கி இறந்த பையாஸ் அஹமத்
பகிர்:

வாணியம்பாடியில் வீட்டின் கழிவுநீா் கால்வாய் அடைப்பை சரிசெய்ய முயன்ற போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆம்பூா் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் பையாஸ் அஹ்மத் (32). இவா் சவூதி அரேபியாவில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். மூன்று மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவா், கடந்த இரண்டு மாதங்களாக மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பெரியாங்குப்பம் கிராமத்தில் தங்கி இருந்தாா். இந்நிலையில், கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு வாணியம்பாடி ராமாயண தோப்பு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து பெற்றோருடன் தங்கியிருந்தாா். இந்நிலையில் தாய் வீட்டின் கழிவுநீா் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதற்காக நீளமான இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி முயன்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக அந்த இரும்பு கம்பி வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த உயா் மின்னழுத்த மின்கம்பியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து பையாஸ்அஹ்மத் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த நகர போலீஸாா், பையாஸ் அஹ்மத்தின் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.