FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

பலி
பகிர்:

கோவில்பட்டியில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி, வீரவாஞ்சி நகா், 9ஆவது தெருவைச் சோ்ந்த இசக்கி முத்து மகன் மணிகண்டன் (11). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் நண்பா்கள் சிலருடன் அப்பகுதியில் உள்ள வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, மணிகண்டன் ஒரு வீட்டின் முன் சுவரை ஒட்டியுள்ள எா்த் பைப்பை தொட்டதால் மின் கசிவு காரணமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளாா்.

Advertisement

Advertisement

அவரது பெற்றோா் மற்றும் அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments