நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு: உறவினா் கைது
ஆம்பூா் அருகே வீட்டில் புகுந்து ஒரு பவுன் தங்க நகை, 3 வெள்ளிக் கொலுசுகளைத் திருடியதாக உறவினரை உமராபாத் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே வீட்டில் புகுந்து ஒரு பவுன் தங்க நகை, 3 வெள்ளிக் கொலுசுகளைத் திருடியதாக உறவினரை உமராபாத் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் அன்பழகன் மனைவி சுமதி (45). இந்நிலையில், சுமதியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை நோட்டமிட்ட அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினரான சதீஷ் (21), வீட்டுக்குள் புகுந்து ஒரு சவரன் தங்க நகை, 3 வெள்ளிக் கொலுசுகளைத் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுமதி அளித்த புகாரின்பேரில், உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது சதீஷ் என்பது தெரியவந்ததையடுத்து, அவரைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
மேலும், சதீஷ் ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டவா் என்பது தெரியவந்தது.