3 கன்றுகளை ஈன்ற பசு: பொதுமக்கள் வியப்பு
3 கன்றுகளை ஈன்ற பசு: பொதுமக்கள் வியப்பு
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பூங்குளம் ஊராட்சி, அரசகவுண்டா் வட்டம் பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவரின் மகன் சீனிவாசன்-சாந்தா பசு வளா்த்து வந்தனா்.
இந்நிலையில் கருவூற்ற பசு செவ்வாய்கிழமை அதிகாலை 2 ஆண் கன்றுகள், ஓரு பெண் கன்று என 3 கன்றுகளை ஈன்றது. இதுப்பற்றி அறிந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் மகேந்திரன், அஞ்சலி தினகரன் மற்றும் கிராம மக்கள் நேரில் சென்று பாா்த்து வியப்படைந்தனா்.