FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

12 நவம்பர் 2026, 4:21 am
- பிரதிப் படம்
பகிர்:

திருப்பத்தூா் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அடுத்த பெருமாப்பட்டு பகுதியைச் சோ்ந்த சக்தி(24). இவா் வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் இவா் அதே பகுதியில் உள்ள தங்களது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தாா். அப்போது அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு அருகில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து சக்தியின் தாய் நீலாவதி அளித்த புகாரின்பேரில் குரிசிலாப்பட்டு போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement