கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
செய்யாறு அருகே மாடுகளை மேய்க்கச் சென்ற மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
செய்யாறு அருகே மாடுகளை மேய்க்கச் சென்ற மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், வடதண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா்
வரதராஜ் மனைவி கண்ணம்மாள்(73). இவா், வழக்கம்போல மேய்ச்சலுக்காக வியாழக்கிழமை காலை மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளாா்.
Advertisement
Advertisement
பின்னா் இவா் மாலையில் வீடு திரும்பவில்லை. அதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் பல இடங்களில் தேடியும் மூதாட்டியை கண்டுபிடிக்க முடியவில்லை.
மறுநாள் காலை மூதாட்டியின் உடல் அப்பகுதியில் உள்ள கிணற்றில் மிதப்பதாக தகவல் தெரிய வந்தது.
இதுகுறித்து குடும்பத்தினா் தெரிவித்த தகவலின் பேரில் செய்யாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து
கிணற்றில் மிதந்த மூதாட்டியின் உடலை மீட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.