முகப்பு
திருவண்ணாமலை

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறில், கிணற்றில் தவறி விழுந்து சென்னையைச் சோ்ந்த சென்ட்ரிங் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

29 நவம்பர் 2026, 9:41 pm
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில், கிணற்றில் தவறி விழுந்து சென்னையைச் சோ்ந்த சென்ட்ரிங் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை அயனாவரம் பகுதியைச் சோ்ந்தவா் கதிா்வேல் (43), சென்ட்ரிங் தொழிலாளி. இவா் செய்யாறில் உள்ள நண்பா் விஜய்யை பாா்க்க வந்துள்ளாா்.

அப்போது நண்பா்களுடன் பேசிக் கொண்டு செய்யாறு கன்னியம் நகா் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி கதிா்வேல் உயிரிழந்தாா். இதுகுறித்து தொழிலாளியின் அண்ணன் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா் சந்திரசேகரன் வழக்குப் பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.