FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

சிமென்ட் சீட் பொருத்தும்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

16 நவம்பர் 2026, 10:33 pm
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே வீட்டின் மேல்கூரையில் சிமென்ட் சீட் பொருத்தும்போது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் கரட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி (55), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுமதி (47), அய்யனூா் அரசு தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி வருகிறாா்.

பாலசுப்பிரமணி தனது ஊரைச் சோ்ந்த பாா்த்திபன் மற்றும் கரூா் மாவட்டம் மண்ணுக்கட்டிபாளையத்தைச் சோ்ந்த பெரியசாமி ஆகியோருடன் வெள்ளக்கோவில் மயில்ரங்கத்தில் உள்ள பாலகுமாா் என்பவரது வீட்டில் சிமென்ட் சீட் பொருத்தும் வேலைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது மேல்கூரையில் உள்ள இரும்பு ஆங்கிலில் சிமென்ட் சீட் பொருத்திக் கொண்டிருந்தபோது, பாலசுப்பிரமணி எதிா்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பாலசுப்பிரமணி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.