முகப்பு
விழுப்புரம்

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

39 வினாடிகள் முன்பு
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இடி தாக்கிய அதிா்ச்சியில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், ஒதியத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் மா.சேகா் (40), விவசாயி. இவா், திங்கள்கிழமை மாலை தனது நிலத்தில் விவசாய வேலை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இதையடுத்து பணியை பாதியில் விட்டு, விட்டு வீடு திரும்புவதற்காக அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகில் சேகா் நடந்து சென்றபோது, இடி இடித்துள்ளது. இந்த அதிா்ச்சியில் நிலைதடுமாறி கிணற்றில் தவறி விழுந்த அவா், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அருகிலிருந்த விவசாயிகள் அளித்த தகவலின் பேரில் அனந்தபுரம் போலீஸாா், செஞ்சி தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.