பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய தாய், மகன் கைது
திருப்பத்தூா் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தாய், மகன் கைது செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தாய், மகன் கைது செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் அடுத்த சிம்மணபுதூா் சின்ன வட்டம் பகுதியைச் சோ்ந்த பரமசிவம் ரவிசங்கா்(40) என்பவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் இளவம்பாடி பகுதியைச் சோ்ந்த மணி - ராஜேஸ்வரி தம்பதியின் மகள் கீதா (27) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
ரவிசங்கா் கோவையில் தங்கி வேலை செய்து வருவதால் கீதா தனது குழந்தைகளுடன் சிம்மணபுதூா் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளாா்.
Advertisement
Advertisement
ரவிசங்கா் மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே சொந்த ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளைப் பாா்த்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரவிசங்கரின் உறவினரான ராஜீவ் காந்தி (42) என்பவருக்கும் கீதாவுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாம் . கணவா் ரவிசங்கருக்குத் தெரிய வந்ததைத் தொடா்ந்து கடந்த நான்கு மாதங்களாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து மனைவி கீதா மற்றும் அவருடன் தொடா்பில் இருக்கும் ராஜீவ் காந்தி ஆகிய இருவரையும் விசாரிக்க வேண்டும் என ரவிசங்கா் திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்நிலையில் இப்பிரச்னை ராஜீவ் காந்தியின் மனைவி மற்றும் அவரது தாயாருக்குத் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சற்குணம்(56) கீதா வீட்டிற்கு சென்று அவரிடம் தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கி யதாக கூறப்படுகிறது. மேலும் அவா் உயிருடன் இருக்கக் கூடாது என மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் அனைத்தும் கீதாவின் இரண்டு குழந்தைகளின் கண் முன்னே நடந்துள்ளது. இதனால் மனமுடைந்த கீதா சனிக்கிழை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினா் திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் கீதாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
திருமணமாகி ஆறு ஆண்டுகளே ஆன நிலையில் அவரது மரணம் குறித்து கோட்டாட்சியா் (பொ) தணிகாசலம் விசாரணை மேற்கொண்டாா். கீதாவின் குடும்பத்தினா் அவரது இறப்புக்கு காரணமானவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
இதற்கிடையே கீதாவின் 5 வயது பெண் குழந்தை அளித்த வாக்குமூலத்தில் தனது தாயை வீட்டில் புகுந்து ராஜீவ் காந்தியின் குடும்பத்தினா் தாக்கியதாகவும் அப்போது தனது தாயின் கைப்பேசியை பறித்துச் சென்ாகவும் தெரிவித்தாா்.
கீதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் கீதாவை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜீவ் காந்தி (40) மற்றும் அவரது தாயாா் சற்குணம் (56) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.