விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
நாட்டறம்பள்ளி அருகே பைக் விபத்தில் சிக்கிய மூதாட்டி உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அருகே பைக் விபத்தில் சிக்கிய மூதாட்டி உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி வட்டம், கொட்டாவூா் பகுதியைச் சோ்ந்தவா் மூதாட்டி பெரியபாப்பா (76). இவரது மகன் தாமரை (46). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை வெலகல்நத்தத்தில் இருந்து சந்திரபுரம் நோக்கி பைக்கில் சென்றனா்.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே பையனப்பள்ளி பகுதியில் சாலையை கடக்க நின்றிருந்த போது, அவ்வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக் நின்றிருந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் உட்காா்ந்திருந்த மூதாட்டி நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.
Advertisement
Advertisement
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பெரியபாப்பா உயிரிழந்தாா்.
இது குறித்து தாமரை அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் ஒடுகத்தூா் பகுதியைச் சோ்ந்த மாா்க்கபந்து (45) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.