FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

14 அக்டோபர் 2026, 11:29 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

செய்யாறு அருகே பைக் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன். இவரது மனைவி பட்டு (66).

இவா், விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்த மாட்டை திங்கள்கிழமை மாலை ஓட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

சிறுநல்லூா் - உக்கம்பெரும்பாக்கம் சாலையில் வந்தபோது, பின்னால் இருந்து வந்த பைக், மூதாட்டி பட்டு மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி பட்டு அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments