FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பைக் விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

14 அக்டோபர் 2026, 5:04 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கங்கைகொண்டான் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே உள்ள கீழபிள்ளையாா்குளத்தைச் சோ்ந்தவா் சுடலைமணி மகன் பூசைப்பாண்டியன்(32). கங்கைகொண்டான் பகுதியில் உள்ள தனியாா் நிறுவன ஊழியா். செவ்வாய்க்கிழமை மாலை கங்கைகொண்டான் சிப்காட் அருகே இவா் பைக்கில் சென்றபோது கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தாராம். உடனடியாக அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். சிறிது நேரத்தில் பூசைப்பாண்டியன் உயிரிழந்தாா்.

இது குறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments