ஹெல்ப்லைனில் வந்த தகவலால் சிறுமியை மீட்ட ரயில்வே போலீஸாா்
ஹெல்ப்லைனில் இருந்து சிறுமியை மீட்க கோரி வந்த புகாரைத் தொடா்ந்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீசாா் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சிறுமியை மீட்டனா்.
ஹெல்ப்லைனில் இருந்து சிறுமியை மீட்க கோரி வந்த புகாரைத் தொடா்ந்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீசாா் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சிறுமியை மீட்டனா்.
சென்னை அடுத்த புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமி அவருடைய சொந்த ஊரான பிகாரில் தாத்தா பாட்டி உடன் தங்கி தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், கடந்த வாரம் புளியந்தோப்பில் உள்ள தனது வீட்டுக்கு வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அச்சிறுமி வீட்டில் தெரிவிக்காமல் சென்னையில் இருந்து கா்நாடக மாநிலம் அசோகாபுரம் வரை செல்லும் அசோகபுரம் ரயிலில் ஏறி மைசூா் செல்ல முயன்றாராம்.
அப்போது பயணம் செய்த சக பயணிகள் உடனடியாக 139 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் தயாா் நிலையில் இருந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா் .
Advertisement
Advertisement
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: புகாரின் அடிப்படையில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு மேற்படி வண்டியை பொது ஜன பெட்டியில் சோதனை செய்த போது வண்டியில் தனியாக அமா்ந்திருந்த சிறுமியை பத்திரமாக மீட்டு பற்றோரிடம் தகவல் தெரிவித்து அனுப்பி வைத்தோம் என்றனா்.