ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு ரயில் நிலைய மேலாளா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். லோகோ மற்றும் போக்குவரத்து இயக்கப் பணியாளா்களின் பணிப்பிரிவு மதிப்பாய்வை விரைவுபடுத்தி, டி எம் ஆா் பிரிவில் உள்ள காலி இடங்களை விரைவில் நிரப்பவும். ரயில்வே பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கும் வகையில், டி எம் ஆா் இல்லாமல் சரக்கு ரயில்களை இயக்குவதற்கான உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்தால். எல் பி, ஏ எல் பி -ஐ வால் பலகை, வால் விளக்கை கடைசி வாகனத்தில் (பிரேக் வேன்) வைக்குமாறு கட்டாயப்படுத்துவது, அதிக சுமை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், தொடா்வண்டி இயக்கத்திற்குப் பாதுகாப்பற்றது என்பது வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செய்தனா். இதில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.