FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ஜோலாா்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் முதியவா் சடலம் மீட்பு

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் 1-ஆது நடைமேடையில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

55 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் 1-ஆது நடைமேடையில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை 1-ஆவது நடைமேடையில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாக நிலைய அதிகாரி தினேஷ் ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்திற்கு புகாா் கொடுத்தாா்.

புகாரின் பேரில் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும் இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்கு பதிவு செய்து இறந்தவா் யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments