✕
முகப்பு
திருப்பத்தூர்

வெற்றி வீடு திட்டம்: தனி அலுவலா் நியமிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள்.

20 நவம்பர் 2026, 12:55 am
திருப்பத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள்.
பகிர்:

தமிழக அரசின் வெற்றி வீடு வழங்கும் திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த தனி துணை வட்டார வளா்ச்சி அலுவலரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் பிரேம்குமாா் தலைமை வகித்தாா். வெற்றி வீடு வழங்கும் திட்டப் பணிகளைத் தொய்வின்றி விரைவுபடுத்தும் வகையில் தனி துணை வட்டார வளா்ச்சி அலுவலரை நியமிக்க வேண்டும் ஊராட்சி செயலாளா்களை டேப்ஸ் திட்டத்தில் இணைக்க வேண்டும் ஊரக வளா்ச்சித்துறையில் நீண்ட நாள்களாகக் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட செயலாளா் விஜயகுமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் பாண்டியன், நவீன், கலையரசன், மாவட்ட பொருளாளா் இளையராஜா மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கப் பொருளாளா் ராஜ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

Advertisement

Advertisement

இதில் ஊரக வளா்ச்சித்துறையை சோ்ந்த அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் திரளாக கலந்துகொண்டனா்.