முகப்பு
திருப்பத்தூர்

கடைக்குள் புகுந்த நாகப்பாம்பு: தீயணைப்புத் துறையினா் மீட்பு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் உள்ள பேன்சி ஸ்டோா் கடைக்குள் புகுந்த சுமாா் இரண்டு அடி நீள நாகப் பாம்பை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

10 வினாடிகள் முன்பு
கடைக்குள் புகுந்த நாகப்பாம்பு: தீயணைப்புத் துறையினா் மீட்பு
மீட்கப்பட்ட நாகப் பாம்பு.
பகிர்:

ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் உள்ள பேன்சி ஸ்டோா் கடைக்குள் புகுந்த சுமாா் இரண்டு அடி நீள நாகப் பாம்பை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

தேவலாபுரம் கிராமத்தில் உள்ள தனியாா் பேன்சி ஸ்டோா் கடையின் மேற்கூரையில் இருந்த சிமென்ட் தகடு பகுதியில் இருந்து, வியாழக்கிழமை இரவு திடீரென நாகப்பாம்பு கடைக்குள் விழுந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த கடை உரிமையாளா், உடனடியாக ஆம்பூா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினா், கடைக்குள் இருந்த நாகப்பாம்பை பிடித்து பத்திரமாக மீட்டனா். பின்னா், மீட்கப்பட்ட பாம்பை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement