சங்கராபுரம் அருகே சோகம்: பாம்பு கடித்து 2 குழந்தைகள் பலி; உயிருக்கு ஆபத்தான நிலையில் தாய்
சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தில் பாம்பு கடித்த 2 குழந்தைகள் பலியானது குறித்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தில் பாம்பு கடித்த 2 குழந்தைகள் பலியான நிலையில், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரன்-புஷ்பா தம்பதியினர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தர்ஷினி மற்றும் ஜனனி என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வழக்கபோல் ஏரிக்கரை அருகில் உள்ள வீட்டில் உறங்கச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் வீட்டில் புகுந்த கட்டுவிரியான் பாம்பு, தாய் புஷ்பா மற்றும் குழந்தைகள் தர்ஷினி மற்றும் ஜனனி ஆகிய இருவரையும் கடித்துள்ளது.
2 குழந்தைகள் பலி
இதையடுத்து அவர்கள் மூவரும் அருகில் உள்ள புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அதில் குழந்தைகள் தர்ஷினி மற்றும் ஜனனி ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆபத்தான நிலையில் தாய்
தாய் புஷ்பா உயிருக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.