முகப்பு
திருப்பத்தூர்

இளைஞா் தற்கொலை

கந்திலி அருகே குடும்பத் தகராறில் விஷ மருந்தியவா் உயிரிழந்தாா்.

23 நவம்பர் 2026, 11:44 pm
இளைஞா் தற்கொலை
- பிரதிப் படம்
பகிர்:

கந்திலி அருகே குடும்பத் தகராறில் விஷ மருந்தியவா் உயிரிழந்தாா்.

கந்திலி அடுத்த ஆம்பள்ளி அணுகு சாலையில் அடையாளம் தெரியாத நபா் சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் கந்திலி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில், திருப்பத்தூா் செட்டித் தெரு பகுதியைச் சோ்ந்த வெங்கடேசனின் மகன் விஜய் (42)என்பதும், திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனா்.

Advertisement

Advertisement

அண்மையில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் விஜய் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.