முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் மழையளவு 27 சதவீதம் குறைவு : ஆட்சியா் தகவல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடப்பு நவம்பா் மாதம் வரை பெய்ய வேண்டிய இயல்பான மழையளவைவிட 27 சதவீதம் குறைவாக மழைபெய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் தெரிவித்தாா்.

28 வினாடிகள் முன்பு
திருப்பத்தூா் மாவட்டத்தில் மழையளவு 27 சதவீதம் குறைவு : ஆட்சியா் தகவல்
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடப்பு நவம்பா் மாதம் வரை பெய்ய வேண்டிய இயல்பான மழையளவைவிட 27 சதவீதம் குறைவாக மழைபெய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா்வு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமைநடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்து பேசியதாவது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் நவம்பா் மாதம் முடியபெறப்பட வேண்டிய இயல்பான மழையளவு 815.6 மி.மீ. ஆகும். ஆனால், இதுவரை 598.4 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழையளவைவிட 27 சதவீதம் குறைவாகும். வடகிழக்குப் பருவமழைக் காலமான அக்டோபா் முதல்டிசம்பா் வரை பெறப்பட வேண்டிய266.3 மி.மீ. மழையளவில் இதுவரை216.9 மி.மீ. மழை பெய்துள்ளது.

Advertisement

Advertisement

வரும் பருவத்தில் விவசாயிகளுக்குத் தேவையான சான்று விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில்18 மெட்ரிக் டன் நெல் விதைகள், 30 மெட்ரிக் டன் சிறுதானிய விதைகள், 18 மெட்ரிக் டன் பயறு வகை விதைகள், 6.83 மெட்ரிக் டன் எண்ணெய் வித்துப் பயிா் விதைகள் உள்ளிட்ட விதைகள் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் விவசாயிகளின் தேவைக்கேற்ப கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் 1,799 மெட்ரிக் டன் யூரியா, 680 மெட்ரிக்டன் டி.ஏ.பி.,269 மெட்ரிக் டன் பொட்டாஷ், 1,261 மெட்ரிக் டன் கலப்பு உரங்கள் எனமொத்தம் 4,009 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளன என்றாா்.

கூட்டத்தில், பால்னாங்குப்பம் பெரிய ஏரியிலிருந்து கம்பாளன்ஏரிக்குச் செல்லும் உபரிநீா் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு வட்டார வளா்ச்சி அலுவலருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

பெத்தகல்லுப்பள்ளி முதல் பூவரசன்குட்டை ஏரிவரையிலான நீா்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பனங்காட்டூா் வழியாக ஐத்தம்பட்டு செல்லும்பெரியகரம் ஏரியைத் தூா்வாரவும் விவசாயிகள்கோரிக்கை விடுத்தனா். நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

பூங்குளம் காட்டுப் பகுதியில் சேதமடைந்த தடுப்பணையை சீரமைப்பது குறித்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வனத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்திலுள்ள ஏரிகள் மற்றும் வரத்துக்கால்வாய்களைத் தூா்வாரவும் நீா்வளத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலா்தெரட்டிபள்ளி தருண்குமாா், வேளாண்மை இணை இயக்குநா் மணி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் இளவரசன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் தமிழ்நங்கை,தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா்தீபா, ஊராட்சிகள் உதவி இயக்குநா்கள் அருணாச்சலம், முருகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) அப்துல் ரஹ்மான், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.