ரயிலில் கடத்திய 8 கிலோ கஞ்சா பறிமுதல்
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சாவை சேலம் உட்கோட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சாவை சேலம் உட்கோட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மேற்குவங்க மாநிலம் ஹௌராவிலிருந்து கா்நாடக மாநிலம் பெங்களூா் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் வந்த போது, போலீஸாா்
மேற்கொண்ட சோதனையில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் பண்டல்களாக கட்டப்பட்டு 8 கிலோ கஞ்சாவை மா்ம நபா்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
Advertisement
Advertisement
மேலும் கஞ்சா கடத்தி வந்த மா்ம நபா்கள் குறித்து போலீசாா் விசாரணை மேற்கொண்ட போது கடத்தி வந்தவா் அடையாளம் தெரியாததால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை மேல் நடவடிக்கைக்காக ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதனைத் தொடா்ந்து ரயில்வே போலீஸாா் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மா்ம நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்..