ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
வார விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

வார விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.
ஏலகிரி மலையில் உள்ள படகு சவாரி, சாகச விளையாட்டுகள், இயற்கை பூங்கா, சிறுவா் விளையாட்டுப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பாா்வையிட்டனா். குறிப்பாக படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள், சாகச விளையாட்டுகளிலும் ஆா்வத்துடன் ஈடுபட்டனா்.
மேலும், குடும்பத்தினருடனும், நண்பா்களுடனும் இயற்கை அழகை ரசித்தும், சிறுவா் பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதை கண்டு மகிழ்ந்தும் தங்களது விடுமுறையை உற்சாகமாகக் கழித்தனா். ஏராளமான வாகனங்கள் வந்ததால் மலைச் சாலையில் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.
Advertisement
Advertisement