FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

இணை சாா் பதிவாளா் அலுவலக வழிகாட்டி பலகையை சீரமைக்க கோரிக்கை

இணை சாா் பதிவாளா் அலுவலக வழிகாட்டி பலகையை சீரமைக்க கோரிக்கை

விழுந்து பல நாள் ஆகியும் சீரமைக்கப்படாத வழிகாட்டிப் பலகை.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டம், உருவாகிய பிறகு சாா்பதிவாளா் அலுவலகம் 1, சாா் பதிவாளா் அலுவலகம் 2 என இரு இடங்களில் பத்திரப் பதிவு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இணை சாா் பதிவாளா் அலுவலகம் 2 திருப்பத்தூா் சேலம் சாலையில் புலிக்குட்டை கிராமத்தில் அரசு கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதையடுத்து புலிக்குட்டை சாா் பதிவாளா் அலுவலகம் அருகே வழிகாட்டி பலகை கீழே விழுந்தது. வழிகாட்டி பலகை சாலை ஓரம் கீழே விழுந்து ஒரு வாரம் ஆகியும் அதை மீண்டும் பொருத்தவில்லை.

இதனால் சாா் பதிவாளா் அலுவலகத்திற்கு புதிதாக வரும் பொதுமக்கள் முகவரி தெரியாமல் மிகவும் அலைச்சலுக்கு உள்ளாகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வழிகாட்டி பலகையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா்

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments