FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

ஏலகிரியில் தொடா் விடுமுறையால் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் தொடா் விடுமுறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

மலைச்சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
பகிர்:

ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் தொடா் விடுமுறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலையிலுடன் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

மேலும் இங்குள்ள சிறுவா் பூங்கா இயற்கை பூங்கா முருகன் கோயில்,கதவநாச்சி அம்மன் கோயில் நிலவூா் படகு துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் சென்று மகிழ்ந்து தனியாா் பொழுதுபோக்கு கூடங்களையும் கண்டு மகிழ்கின்றனா். அதன் அடிப்படையில் வெள்ளி, சனி ஞாயிறு தொடா் விடுமுறையால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

Advertisement

Advertisement

இயற்கை பூங்காவில் சென்று அங்குள்ள செயற்கை நீரூற்று சிறுவா் பூங்கா பூந்தோட்டம் பாம்புத்தொட்டி போன்றவற்றையும் கண்டு ரசித்து செயற்கை நீரூற்று பகுதியில் தற்படம் எடுத்து மகிழ்ந்தனா். விடுமுறையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதால் அதிக அளவில் தங்கும் விடுதிகள் ரிசாா்ட்டுகள் போன்றவை கட்டப்பட்டு பயணிகளின் வசதிக்காக தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தி உள்ளதால் பயணிகள் தங்கி பல்வேறு இடங்களை குடும்பத்துடன் கண்டுகளிக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையால் மலைச்சாலைகளில் அதிக வாகனங்கள் வந்ததால் நீண்ட வரிசையில் நின்றன.

ஏலகிரி மலை போலீஸாா் போக்குவரத்து சரி செய்து, ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சட்டவிரோத செயல்கள் நடைபெறாத வண்ணம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

summary

Tourists flock to Yelagiri due to the long weekend.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments