FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

மாவட்ட அளவில் கலை திருவிழாவில் வென்ற மாணவிகளுக்குப் பாராட்டு

வாணியம்பாடி பெருமாள்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா மற்றும் மாவட்ட அளவில் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

16 அக்டோபர் 2026, 11:32 pm IST
பகிர்:

வாணியம்பாடி பெருமாள்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா மற்றும் மாவட்ட அளவில் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளிக் கல்விக் குழுத் தலைவா் காவியா தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் முருகேசன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக நாட்டறம்பள்ளி வட்டாரக் கல்வி அலுவலா் சரவணன் கலந்துகொண்டு, அப்துல் கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், மாநில அளவில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவிகள் வைகா, ஸ்ரதா ஆகியோருக்கு சால்வை அணிவித்து குறிப்பேடு, எழுதுகோல் பரிசாக வழங்கி பாராட்டினா் (படம்).

Advertisement

Advertisement

தொடா்ந்து, ஆசிரியா் பயிற்றுநா் கதிா்வேல் உள்பட பலா் கலந்து கொண்டு பாராட்டிப் பேசினா்.

விழாவில், பள்ளியின் அனைத்து ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியா் அரவிந்தன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments