FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி பேரூராட்சி மன்ற கூட்டம்

நாட்டறம்பள்ளி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் மன்ற கூட்டம் பேரூாரட்சி மன்றத் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

16 அக்டோபர் 2026, 11:36 pm IST
நாட்டறம்பள்ளியில் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமையில் நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

நாட்டறம்பள்ளி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் மன்ற கூட்டம் பேரூாரட்சி மன்றத் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு துணைத் தலைவா் தனபால் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் ரவிசங்கா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் சூரியகுமாா் கலந்துக் கொண்டாா். கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் தங்கள் வாா்டில் செய்யப்பட வேண்டிய திட்டப் பணிகள் குறித்து கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் ஆயூத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சி உறுப்பினா்கள் குருசேவ், ஞானசேகரன், விஜியகுமாா்,சிவக்குமாா், நதியா ஜெயமணி, அமுதா இளங்கோ, லட்சுமி தேவராஜி, பிரேமா கருணாநிதி, மஞ்சுளா முனிகிருஷ்ணன் மற்றும் அலுவலகப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments