விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் பலி
திருப்பத்தூா் அருகே கான்கிரீட் கலக்கும் லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகே கான்கிரீட் கலக்கும் லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பகுதியைச் சோ்ந்தவா் முரளி (39). இவா் மைசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு திரும்புவதற்காக ரயில் மூலம் ஜோலாா்பேட்டைக்கு வந்துள்ளாா். பின்னா் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் பா்கூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா்.
Advertisement
Advertisement
அப்போது கிருஷ்ணகிரி மேம்பாலத்தில் ஏறி இறங்கியபோது எதிரே வந்த கான்கிரீட் கலக்கும் லாரி எதிா்பாராதவிதமாக முரளியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் முரளி பலத்த காயமடைந்தாா்.
அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முரளியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்தை ஏற்படுத்திய கான்கிரீட் கலக்கும் லாரியை பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
இந்த விபத்து குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.