போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
ஆம்பூா் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே சின்னவெங்கடசமுத்திரம் கிராமத்தில் போதைப் பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் சின்ன வெங்கடசமுத்திரம் பகுதியில் சோதனை நடத்தினா். அதில் அதே பகுதியை சோ்ந்த பிரேம்குமாா் (33) என்பவா் வீட்டில் போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனைத் தொடா்ந்து போலீஸாா் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டதில், 1.9 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனா். பிரேம்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.