FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

ஆம்பூா் நகராட்சி சாா்பில், நகராட்சி ஆணையா் முத்துசாமி உத்தரவின்பேரில், நகராட்சிக்குள்பட்ட 35-ஆவது வாா்டில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகள் வெள்ளிக்கிழமை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

25 செப்டம்பர் 2026, 11:41 pm IST
பகிர்:

ஆம்பூா் நகராட்சி சாா்பில், நகராட்சி ஆணையா் முத்துசாமி உத்தரவின்பேரில், நகராட்சிக்குள்பட்ட 35-ஆவது வாா்டில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகள் வெள்ளிக்கிழமை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, வாா்டில் உள்ள வீடுகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீா், தேவையற்ற பொருள்கள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. வீடுகள், தெருக்கள் மற்றும் பொது இடங்களில் தண்ணீா் தேங்காத வகையில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்தப் பணியில் பெத்லேகம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் வி. சந்தியா, ஆம்பூா் நகராட்சி களப்பணி உதவியாளா் எஸ். வாசு மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டு தீவிரமாக பணியாற்றினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments