FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கோழிப்பண்ணையில் 13 கொத்தடிமைகள் மீட்பு

திருத்தணி அருகே கோழிப்பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 13 பேரை வருவாய்த் துறையினர் சனிக்கிழமை மீட்டனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

திருத்தணி அருகே கோழிப்பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 13 பேரை வருவாய்த் துறையினர் சனிக்கிழமை மீட்டனர்.

கொள்ளகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கீதா சுதர்சனம். இவரருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் சிலர் கொத்தடிமைகளாக இருப்பதாக திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு விரைந்த வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் கோழிப்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உள்பட 13 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதில், வெங்கடாபுரம் இருளர் காலனியைச் சேர்ந்த தாஸ் (26) அவரது மனைவி பவிந்திரா (23), மகள்கள் மாலினி (3), செஞ்சம்மாள் (1), ராமாபுரம் இருளர் காலனி சேகர் (27), அவரது மனைவி பச்சையம்மாள் (23), மகன் சங்கர் (5), குமாரகுண்டா இருளர் காலனி கிரி (27), அவரது மனைவி தேவி (23), மகள் நாகம்மாள் (6), மகன் கன்னைய்யன் (4), அதே காலனியைச் சேர்ந்த தர்மன் (25) அவரது மனைவி லட்சுமி (18) ஆகிய நான்கு குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கடந்த இரு ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கோழிப்பண்ணை உரிமையாளரிடம் விசாரணை நடத்திய போலீஸார், மீட்கப்பட்ட தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments