வடகிழக்கு பருவமழை: ஆலோசனைக் கூட்டம்
திருவள்ளுர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
திருவள்ளுர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் கே. முத்து தலைமை வகித்துப் பேசியது:
ஒவ்வொரு வட்டாட்சியரும் தங்களது வட்டத்துக்கு உள்பட்ட பேரிடர் தாக்குதலுக்குள்ளாகும் பகுதிகளைக் கண்டறிய வேண்டும், அந்தப் பகுதிகளில் வசிக்கும் சில முக்கிய நபர்களின் பெயர்கள், செல்லிடப்பேசி எண் போன்ற விவரங்கள் அடங்கிய கையேட்டை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
பேரிடர் தாக்குதலுக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க அதற்கான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
அத்தியாவசியப் பொருள்களை இருப்பு வைக்க உத்தரவு: நீர்வரத்து ஆதாரங்கள், கண்மாயில் மண் அரிப்பு ஏற்பட்டு உடைப்பு ஏற்பட்டால், உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்.
அத்தியாவசிய உணவுப் பொருள்களை (அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை) குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு உபயோகப்படுத்தும் வகையில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் பகுதிகளில் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் இருப்பு வைத்திருக்க வேண்டும். பேரிடர் நேரங்களில் பயன்படுத்தும் வகையில் கட்டுமரம், படகு வைத்திருப்பவர்கள் விவரம், நீச்சல் தெரிந்தவர்களின் முழு விவரம் அடங்கிய கையேடுகளை வைத்திருக்க வேண்டும். மழை நிலவரம், பேரிடர் குறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார் அவர்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சா.குமார், திருவள்ளூர் துணை ஆட்சியர் ராகுல்நாத், அனைத்து வருவாய்த் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.