FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாமனார் கொலை; மருமகன் கைது

வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் வீடு புகுந்து மாமனாரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் அவரது மருமகனை முத்தா புதுப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் வீடு புகுந்து மாமனாரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் அவரது மருமகனை முத்தா புதுப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.

ஆவடி அருகே உள்ள முத்தா புதுப்பேட்டை கரலபாளையம் கண்டிகைத் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி (68). இவரது மகள் மாதவியை ஆந்திர மாநிலம் தடாவைச் சேர்ந்த மாரிக்கு (45) கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மாரியின் குடிப் பழக்கம் காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கோபித்துக் கொண்டு மாதவி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தாய் வீடு சென்றுவிட்டார். மனைவியை அழைத்துச் செல்ல வந்த மாரியிடம், மது குடிப்பதை நிறுத்தினால் வந்து வாழ்வதாக மாதவி கூறிவிட்டார். இதனால் ஊருக்கு போகாமல் அதே பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் மாரி, வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் மாமனார் வீட்டுக்குள் நுழைந்து, கத்தியால் குப்புசாமியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

Advertisement

Advertisement

அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குப்புசாமியை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே குப்புசாமி உயிரிழந்தார். இதுகுறித்து முத்தா புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் சார்லஸ் வழக்குப் பதிவுசெய்து வீட்டின் அருகே பதுங்கியிருந்த மாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments