FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

1,049 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடியில் நலத்திட்ட உதவிகள்

திருத்தணி அருகே பட்டாபிராமபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 1,049 பயனாளிகளுக்கு ரூ. 1.27 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:


திருத்தணி அருகே பட்டாபிராமபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 1,049 பயனாளிகளுக்கு ரூ. 1.27 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், திருத்தணி எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் ஆகியோர் புதன்கிழமை வழங்கினர்.
திருத்தணியை அடுத்த பட்டாபிராமபுரம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமையில் நடைபெற்றது. திருத்தணி கோட்டாட்சியர் பவணந்தி வரவேற்றார். 
இதில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பேசியது: கல்வியால் மட்டுமே ஒருவர் தனது வாழ்வை உயர்த்தக் கொள்ள முடியும். உங்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள். கல்வித்துறை மூலம் 16 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போதுள்ள காலத்தில் பெண் குழந்தைகள் மட்டும் பெற்றோரை கவனித்துக் கொள்கின்றனர்.
தற்போது திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, பெண் 800 குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் விகிதாச்சார அடிப்படையில் மாறுபாடு ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் ஆண்களுக்கு திருமணம் செய்துகொள்ள, பெண்கள் கிடைக்க மாட்டார்கள் என்றார்.
தொடர்ந்து, பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, வேளாண்மைத் துறை மூலம் விதை மற்றும் விவசாயக் கருவிகள் என மொத்தம் 1,049 பயனாளிகளுக்கு ரூ. 1.27 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் மற்றும் திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் பி. எம். நரசிம்மன் வழங்கினர். இதில், மாவட்ட முன்னாள் ஊராட்சிக் குழு உறுப்பினர் டி. டி. சீனிவாசன் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். திருத்தணி வட்டாட்சியர் செங்கலா நன்றி கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments