FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

22-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, வேலைவாய்ப்பு முகாம்,  விளையாட்டுப் போட்டிகள், வங்கிக் கடன் முகாம்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, வேலைவாய்ப்பு முகாம்,  விளையாட்டுப் போட்டிகள், வங்கிக் கடன் முகாம் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சிகள் வரும் 22-இல் நடைபெற உள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, வேலைவாய்ப்பு முகாம், விளையாட்டுப் போட்டிகள், வங்கிக் கடன் முகாம் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சிகள் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் டிச.22-இல்  காலை 9 மணிக்கு நடைபெற 
இருக்கின்றன.  
அன்றைய தினம் இம்மாவட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு  அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வழங்குதல், மாற்றுத்திறனின் தன்மையைக் கருத்தில்கொண்டு அவரவருக்கு ஏற்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் மற்றும் தொழில் தொடங்க வங்கிக் கடனுதவி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்நிகழ்வில், இதுவரையில் மருத்துவச் சான்று பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு அவரவர் ஊனத்தின் தன்மைக்கேற்ப மருத்துவப் பரிசோதனை செய்து சான்றுகள் வழங்கப்படும். 
இதற்காக மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-3 ஆகியவற்றை கட்டாயம் எடுத்துவர  வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments