குப்பையில் தயாரித்த உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம்
திருவள்ளூர் நகராட்சியில் குப்பைகளில் தயார் செய்த 17 டன் உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன.
திருவள்ளூர் நகராட்சியில் குப்பைகளில் தயார் செய்த 17 டன் உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன.
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27-வார்டுகளில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பைகள் நாள்தோறும் 29 டன் வரை சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்க ரூ.5 கோடிசெலவில் நுங்கம்பாக்கம் கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குப்பைகளை தரம் பிரித்து உரங்கள் தயார் செய்யப்படுகின்றன. இதில் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் செந்தில்குமார், சுகாதாரப் பிரிவு அதிகாரி கோவிந்தராஜ் ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளை வரவழைத்து 17 டன் குப்பைகளை வழங்கினர். இதுபோன்று தொடர்ந்து இங்கு தயாராகும் உரங்களை விவசாயிகளின் தேவைக்கேற்ப வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.