ஜென் ஸீ இளைஞர்கள் சொந்த உழைப்பில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்: கங்கனா ரணாவத்
சொந்தமாக வாழவே முடியாதவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்காகப் போராடுவதாக கங்கனா ரணாவத் பேசியுள்ளது குறித்து...
ஜென் ஸீ தலைமுறை இளைஞர்கள் சொந்த உழைப்பில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் இன்று (ஜூலை 28) தெரிவித்தார்.
ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஜென் ஸீ தலைமுறை இளைஞர்கள் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் கங்கனா ரணாவத் பேசியதாவது:
''போராட்டத்தில் ஈடுபட்டு இழிவான சொற்களைப் பேசியவர்கள் என்ன மாதிரியான மாணவர்கள். என்ன மாதிரியான மொழியை அவர்கள் (ஜென் ஸீ இளைஞர்கள்) பயன்படுத்துகின்றனர்.
Advertisement
Advertisement
அவர்கள் எந்த வகையில் மாணவர்களைப்போன்று நடந்துகொள்கிறார்கள். 75 வயதான நமது பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அருவருப்பான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.
நாங்களும் (பாஜக) மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம். இந்த இளைஞர்கள் தங்களின் பெற்றோர் வருவாயில் வாழ்கின்றனர். சொந்தமாக வாழவே முடியாதவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்காகப் போராடுகின்றனர்'' எனக் குறிப்பிட்டார்.
நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தர் மந்தர் திடலில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் இணைந்து இளைஞர்கள், மாணவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் எதிரொலியாக மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவியை, தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார். இப்போராட்டத்தில் ஜென் ஸி தலைமுறையினரின் நடவடிக்கை வெகுவாக பலரால் கவரப்பட்டது. எனினும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Gen Z youth must learn to live by their own hard work: Kangana Ranaut
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.