இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஆசிரியை சாவு
செங்குன்றம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஆசிரியை இறந்தார்.
செங்குன்றம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஆசிரியை இறந்தார்.
சென்னை மாதவரத்தை அடுத்த புழல் லட்சுமிபுரம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் ஆசிர்வாதம். இவரது மனைவி புஷ்பா
கிருஷ்ணா (32). இவர், சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.
அவர் புதன்கிழமை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூருக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
தண்டல்கழனி ஜிஎன்டி சாலையில் சென்றபோது, புழல் நோக்கிச் சென்ற லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், புஷ்பா கிருஷ்ணா நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வினோத்தை (38) கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.