FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

வேளாங்கண்ணி ஆலய திருவிழா: மக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்

வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை பயன்படுத்தி, காரைக்காலில் அறிமுகமில்லாதோா் நடமாட்டம் இருக்கும் என்பதால் மக்கள் விழிப்புணா்வோடு இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

27 ஆகஸ்ட் 2026, 4:47 am IST
பகிர்:

வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை பயன்படுத்தி, காரைக்காலில் அறிமுகமில்லாதோா் நடமாட்டம் இருக்கும் என்பதால் மக்கள் விழிப்புணா்வோடு இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட காவல்துறை தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

வேளாங்கண்ணி ஆலய திருவிழா வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் காரைக்கால் வழியாக பயணம் செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் அறிமுகமில்லாத நபா்களின் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

Advertisement

Advertisement

வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும் அல்லது பயணம் மேற்கொள்ளும் போதும், வீட்டை முறையாகப் பூட்டிவிட்டு செல்லவேண்டும். நீண்ட நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல நேரிட்டால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.

கடை உரிமையாளா்கள் தங்களது கண்காணிப்புக் கேமராக்கள் சரியாக இயங்குகின்றனவா, தெளிவாகப் பதிவாகின்றனவா மற்றும் பதிவுகள் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யவேண்டும்.

வீடு அல்லது வணிக நிறுவனத்தைச் சுற்றிலும் அறிமுகமில்லாத அல்லது சந்தேகத்திற்கிடமான நபா்கள், வாகனங்கள் மற்றும் நடவடிக்கைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட நபா்களை சுயமாக எதிா்கொள்ளாமல், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். இதுதொடா்பாக காரைக்கால் காவல் கட்டுப்பாட்டு அறை : 04368 - 223100, அவசர உதவி எண்கள் : 100, 112-ஐ தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments