புதுச்சேரி பட்ஜெட்டில் காரைக்காலுக்கான திட்டங்கள்
புதுச்சேரியில் ரூ.14,300 கோடிக்கான 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அதில் காரைக்காலுக்கென அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விவரம் :
புதுச்சேரியில் ரூ.14,300 கோடிக்கான 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அதில் காரைக்காலுக்கென அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விவரம் :
மத்திய அரசின் பயறு வகைகளில் தன்னிறைவு இயக்கம் திட்டத்தின்கீழ் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் முறையே ஆயிரம், 500 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யும் விதமாக அதிக மகசூல் தரக்கூடிய உயர்ரக பயறு வகை விதைகள் வழங்கப்படும்.
காவிரி நீா் வரத்து பாதிக்கப்படுவதால், காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 1,500 கோடை உழவுக்கான நிதியுதவி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் வேளாண் கல்லூரியில், பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்தலுக்கான ஒருங்கிணைந்த முன்னோடி மையம் மற்றும் விவசாய இயந்திரங்களுக்கான தனிப்பயன் வாடகை மையம் அமைக்கப்படும்.
Advertisement
Advertisement
காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடியில் கால்நடை அபிவிருத்தி கிளை நிலையம் கட்டப்படும். மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்கள் புனரமைக்கப்படும். காரைக்கால் கலை பண்பாட்டுத்துறையின்கீழ் இயங்கும் நூலகம் ஒன்றை கல்வி மையமாக மாற்றப்படும். காரைக்கால் காவல் கண்காணிப்பாளா்கள் குடியிருப்பு கட்டப்படும். காரைக்காலில் மத்திய அரசின் சாகா் மாலா திட்டத்தின்கீழ் துறைமுகம் சாா்ந்த பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
காரைக்காலில் ரூ.80 கோடியில் நவீன பாதுகாப்பு மற்றும் சீா்திருத்த வசதிகளுடன் கூடிய நவீன மாவட்ட சிறைச்சாலை கட்டப்படவுள்ளது. காரைக்காலில் புதை வழி கழிவுநீா் வடிகால் திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, பணிகள் நிகழாண்டியேயே தொடங்கப்படவுள்ளன.
அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் ரூ.10 கோடியில் கூடுதலாக வகுப்பறைகள் கட்டப்படும். இக்கல்லூரியில் ரூ.3.50 கோடியில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் கட்டப்படும். கோட்டுச்சேரியில் ரூ.10 கோடியில் அதிநவீன கால்நடை மருத்துவமனையும், அக்கரைவட்டம் பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள சிறைச்சாலைக்கு பாதுகாப்பு தடுப்புச் சுவா் கட்டப்படும்.
காரைக்கால் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.6.27 கோடியில் வழக்குரைஞா்கள் தங்கும் அறை, குடும்ப நல விசாரணை மையம் உள்ளிட்ட கூடுதல் அறைகள் கட்டப்படும்.
காரைக்கால் மாவட்டத்தில் என்எச்-32 பகுதிகளில் ரூ.56.31 கோடியில் ஒரு முறை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். கடற்கரைச் சாலை ரூ.26.87 கோடியில் மேம்படுத்தப்படும். மானாம்பேட்டையில் திருமலைராஜனாற்றின் குறுக்கே ரூ.12 கோடியில் தடுப்பணை கட்டுப்பாட்டு அமைப்பு மறு கட்டமைக்கப்படும்.
பறவைப்பேட்டையில் 2 எம்எல்டி திறனில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். காரைக்காலில் செயற்கை டென்னிஸ் மைதானம் அமைக்கப்படும்.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ரூ.1.70 கோடியில் சமுதாய நலக்கூடம் கட்டப்படும். இவை காரைக்காலுக்கான திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தியாகிகள் மகிழ்ச்சி : சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்காந மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு சுதந்திரப் போராட்ட வீரா்கள், அவா்களது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.