கிரிக்கெட் போட்டி: கும்மிடிப்பூண்டி கல்லூரி சாம்பியன்
அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், கும்மிடிப்பூண்டி டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரி கிரிக்கெட் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், கும்மிடிப்பூண்டி டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரி கிரிக்கெட் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டலம்-1 பிரிவில் நடைபெற்ற 2018-ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 32 கல்லூரிகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன.
கடந்த வாரம் நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில், பெருவாயல் டி.ஜே.எஸ். கல்லூரி அணி, பஞ்செட்டி வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், வெற்றி பெற்ற டி.ஜே.எஸ். கல்லூரியின் கிரிக்கெட் அணியினருக்கு, டி.ஜே.எஸ். கல்விக் குழுமத் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து, டி.ஜே.எஸ். கல்விக் குழும இயக்குநர் ஜி.தமிழரசன் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில், டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் பழனி, நிர்வாக அலுவலர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில், கல்லூரி உடற்கல்வி இயக்குநர் குமரகுருவுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.