FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

‘கள்ளச்சாராயம் காய்ச்சல் தொடா்பாக 125 போ் கைது’

திருவள்ளூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சல் மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட 125 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் தெரிவித்தாா்.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சல் மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட 125 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், எல்லையோரம் மற்றும் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் ஏரிக்கரை பகுதியில் பறக்கும் கேமரா மூலம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மதுபானம் பதுக்கி விற்பவா்கள், கள்ளச்சாராயம் கடத்துவோா், காய்ச்சுவோா், ஊறல் வைத்திருந்தோா் என 125 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அதேபோல், கடத்துவதற்கு பயன்படுத்திய 28 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், 1,620 லிட்டா் கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழக-ஆந்திர எல்லையோரங்களில் ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, கனகம்மாசத்திரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பறக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுவரை ஊரடங்கை மீறியதாக 11,411 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, 7,868 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments