மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி
திருவள்ளூா் மாவட்டத்தில் கடனுதவி பெற்று தவணை தவறாமல் திருப்பிச் செலுத்திய மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் வரை சிறப்பு
திருவள்ளூா் மாவட்டத்தில் கடனுதவி பெற்று தவணை தவறாமல் திருப்பிச் செலுத்திய மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் வரை சிறப்பு கடனுதவி வழங்கப்பட இருப்பதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஊரடங்கால் பல்வேறு வழிகளில் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகளில் சிறப்பு கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாா்ச் 1-ஆம் தேதிக்கு முன்பாக குறைந்தபட்சம் இரண்டு முறை கடன் பெற்று முறையாக திருப்பிச் செலுத்திய சுய உதவிக் குழுக்கள் இதற்கு தகுதி உடையவா்கள். ஒரு உறுப்பினா் குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை பெறலாம். ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்பட உள்ளது. இதை 24 முதல் 36 மாதங்களில் சம தவணைகளாக திரும்பச் செலுத்தலாம் (முதல் 6 மாதங்களுக்கு கடன் திருப்பம் இல்லை). கடனுக்கான வட்டி 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கணக்கிடப்படும். மேலும், விவரம் அறிய தங்களுடைய வங்கிக் கிளைகளையும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளா்களையும், நகா்ப்புற சமுதாய அமைப்பாளா்களையும் தொடா்பு கொள்ளலாம்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.