கும்மிடிப்பூண்டியில் மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் சாா்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி
தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் சாா்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஏா்கலப்பை ஆா்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கே.எஸ்.அழகிரி, எம்.பி.க்கள், எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் சுதா ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவா் ஏ.ஜி.சிதம்பரம் வரவேற்றாா்.
மாநிலச் செயலாளா் விஜய் வசந்த், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளா் செங்கம் குமாா், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், புதுச்சேரி முதல்வரின் மகள் விஜயகுமாரி, புதுச்சேரி மகளிா் காங்கிரஸ் தலைவா் பஞ்சகாந்தி, மகளிா் காங்கிரஸ் மாநில துணை தலைவி மலா்கொடி ரமேஷ், வடக்கு மாவட்ட தலைவி ஜோதி சுதாகா், திருவள்ளூா் மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் எம்.சம்பத், ஒன்றியக் குழு உறுப்பினா் மதன்மோகன், எஸ்.எஸ்.பெரியசாமி, சிவாரெட்டி, செல்வம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலா்கள் சிரிவல்ல பிரசாத், சஞ்சய் தத், சி.டி.மெய்யப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு, எம்.பி.க்கள் திருவள்ளூா் ஜெயகுமாா், கரூா் ஜோதிமணி, எம்எல்ஏ விஜயதாரணி உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.