FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

21 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

ஆந்திரத்தில் புதுச்சேரி செல்லும் ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 21 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

ஆந்திரத்தில் புதுச்சேரி செல்லும் ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 21 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிபாஸ் கல்யாண் ரயில்கள் மூலம் கஞ்சா கடத்துவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், எஸ்.பி. தனிப்படையினா் வியாழக்கிழமை திருத்தணி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது ஆந்திரத்தில் இருந்து வரும் புதுச்சேரி செல்லும் ரயிலில் அதிரடி சோதனை நடத்தினா். இதில் சந்தேகம் படும்படியாக இருந்த நபரைப் பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விஜய் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments