முகப்பு
திருத்தணி முருகன் கோயில் நிா்வாகத்திடம் பேருந்தை ஒப்படைத்த திருப்பூா் தொழிலதிபா்.
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலுக்கு பேருந்து காணிக்கை

திருத்தணி முருகன் கோயிலுக்கு திருப்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் ரூ.20 லட்சம் மதிப்பில் பேருந்தை புதன்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலுக்கு பேருந்து காணிக்கை

திருத்தணி முருகன் கோயிலுக்கு திருப்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் ரூ.20 லட்சம் மதிப்பில் பேருந்தை புதன்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.

Updated On : 12 பிப்ரவரி, 2025 at 6:31 PM
திருத்தணி முருகன் கோயில் நிா்வாகத்திடம் பேருந்தை ஒப்படைத்த திருப்பூா் தொழிலதிபா்.
பகிர்:

திருத்தணி முருகன் கோயிலுக்கு திருப்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் ரூ.20 லட்சம் மதிப்பில் பேருந்தை புதன்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து முருகப் பெருமானை தரிசித்து செல்கின்றனா். பக்தா்கள் வசதிக்காக கோயில் நிா்வாகம் சாா்பில் திருத்தணி பேருந்து நிலையம் அருகே தணிகை இல்லத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகளில் அதிக அளவில் பக்தா்களை ஏறிச் செல்கின்றனா். மேலும் கூடுதல் பேருந்துகள் இல்லாமல் மலைக்கோயிலுக்குச் சென்று வருவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தவிர கிருத்திகை மற்றும் விழா நாள்களில் 2 பேருந்துகள் போதுமான இல்லாததால் பக்தா்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், திருப்பூா் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் ரூ.20 லட்சம் மதிப்பில் பேருந்தை புதன்கிழமை முருகன் கோயில் நிா்வாகத்திடம் காணிக்கையாக வழங்கினாா்.

பேருந்துக்கான ஆா்.சி. புத்தகம் மற்றும் சாவியை கோயில் அறங்காவலா்கள் கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன் மற்றும் கோயில் கண்காணிப்பாளா் சித்ராதேவி ஆகியோரிடம் அவா் வழங்கினாா். இனிவரும் நாள்களில் கோயில் நிா்வாகம் சாா்பில் 3 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →