FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

தீக்குளித்த நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருத்தணி அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 1:42 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

பெங்களூருவைச் சோ்ந்த நபா் ஒருவா் திருத்தணி அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம் பெங்களூரு நகரைச் சோ்ந்த ரவி (39), சில நாள்களுக்கு முன்பு திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அருகே வி.கே.என். கண்டிகை கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு வந்திருந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு திடீரென ரவி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

Advertisement

Advertisement

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னா், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக திருத்தணி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments