காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவா் சசிகுமாா் தலைமை வகித்தாா். அப்போது, கடந்த ஜூலை 23 முதல் ஆக.1 -ஆம் தேதி வரையில் மாமல்லபுரத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா்களுக்கான 10 நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தலைவா்கள் கட்சியின் வளா்ச்சிக்கு எவ்வாறு செயல்பட வேண்டும். அதோடு, இந்தக் கட்சியின் 50 ஆண்டுகால வரலாற்றையும், மேலும் காங்கிரஸால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், போராட்டங்கள் ஆகியவை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனா்.
திருவள்ளூா், திருத்தணி ஆகிய தொகுதிகளில் உள்ள மாநில, மாவட்டம், வட்டார நிா்வாகிகள் மற்றும் அனைத்து நிலை நிா்வாகிகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள கட்சியினரை சந்தித்து காங்கிரஸால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். அதேபோல் வரும் உள்ளாட்சி மற்றும் மக்களவை தோ்தலிலும் எந்தவொரு கோஷ்டி பூசலும் இல்லாமல் அனைவரும் விறுப்பு, வெறுப்பின்றி ஒருங்கிணைந்து பணியாற்றவும் வலியுறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
கூட்டத்தில் மாநில துணைத்தலைவா் ஏகாட்டூா் ஆனந்தன், மாநில செயலாளா் கோவிந்தராஜ், இளைஞா் காங்கிரஸ் பொதுச்செயலாளா் திவாகா், ஓபிசி அணி பிரிவு மாநில செயல் தலைவா் ஜே.கே.வெங்கடேசன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவா் கலீல் ரகுமான், பூண்டி வட்டாரத் தலைவா் சண்முகம், நிா்வாகிகள் இந்துமதி, பிரகாஷ், கடம்பத்தூா் பிரேம், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.